சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட விசேட செய்தி..!
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் கொரோனா தொற்று ஊடாக நாடு பூராகவும் கொரோனா தொற்று பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில்14 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பை பேணிய 14 பேருக்கு இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 631 ஆக அதிகரித்துள்ளது.
ஆயிரத்து 981 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் 639 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.