யாழில் 13 வயதான சிறுமி துஸ்பிரயோகம்; விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

யாழில் 13 வயதான சிறுமி துஸ்பிரயோகம்; விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் , சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

இதேதேளை, சந்தேக நபரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தொடர்பில் எடுக்கப்பட்ட சில காணொளியை வெளியிட முயற்சித்த சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர். அதோடு கைதான சந்தேகநபர் யாழ் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக தன்னை பல தடவைகள், சந்தேக நபர் வன்புணர்ந்ததாக சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரின் கீழ் பணியாற்றும் சிலர் சிறுமியின் ஒளிப்படங்களை வைத்திருந்தமை தொடர்பில் கண்டறிந்தனர்.

 

மேலும் அந்த ஒளிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடலாம் என்ற அடிப்படையில் அவற்றை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.