பிறந்து 2 மாதங்களே ஆன சிசு உயிரிழந்தது எப்படி?

பிறந்து 2 மாதங்களே ஆன சிசு உயிரிழந்தது எப்படி?

பிறந்து 2 மாதங்களே ஆன ஆண் சிசு உயிரிழந்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட்டுகோட்டை அராலி தெற்கைச் சேர்ந்த சிசு நேற்று (17) அதிகாலை 3 மணி அளவில் தாய்ப்பால் கொடுத்தபின் சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளது.

சிசு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது.

பின் காலை 5.30 மணி அளவில் சிகிச்சை பயனின்றி சிசு உயிரிழந்தது என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.