இரவோடு இரவாக திருடர்கள் கைவரிசை!

இரவோடு இரவாக திருடர்கள் கைவரிசை!

கிளிநொச்சி முகமாலை வடக்குப் பகுதியில் நடுகை செய்யப்பட்டிருந்த நூற்றுக்கும் அதிகமான தென்னம் பிள்ளைகள் நேற்று முன்தினம் (14) இரவோடு இரவாக திருடர்களால் பிடிங்கி செல்லப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்தத்தினால் முகமாலை பிரதேசத்தில் உள்ள அனைத்து தென்னைகளும் அழிவடைந்திருந்தன.

பின்னர் மீள் குடியேற்றத்தை தொடர்ந்து கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவுற்று குறித்த காணியில் சுமார் 1,200 தென்னைகள் மீள் நடுகை செய்யப்பட்ட நிலையில் இரவோடிரவாக திருடர்களால் 100 க்கு மேற்பட்ட தென்னம் பிள்ளைகள் பிடுங்கிச் செல்லப்பட்டுள்ளன.

இது தொடர்பில் காணி உரிமையாளர் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கிராமத்தில் அண்மைக்காலமாக கால்நடைகள் திருடப்பட்டு வருவதோடு, பாடசாலை உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு, தொடர்ச்சியாக மிக மோசமான முறையில் சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெற்று வருவதாக பொது மக்களால் சுட்டிக்காட்டியுள்ளனர்.