
நவராத்திரியும் விஜயதசமியும்...
இந்துமக்களின் நவராத்திரி விரதம் உற்சவத்தின் விஜயதசமி நாளினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் மற்றும் விஷ்ணு ஆலயங்களில் விசேட அபிசேகங்கள், ஆராதனைகள் என்ப இடம்பெற்றன.
இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும் விஜயதசமி உற்சவ தீர்த்த திருவிழா இடம்பெற்றது.
இவ் தீர்த்த திருவிழாவினை ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ செ. ரமணீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தனர். வசந்த மண்டபத்தில் எம் பெருமான் சமேதராக வெள்ளிக் கருடனில் வீற்று அருள் பாலித்தனர்.
நாட்டில் எற்பட்டுள்ள அசாதாரண கொரோனாத் தொற்று சூழ்நிலை காரணமாக பக்தர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
சுகாதார நடைமுறைகள் பின்பற்றி விஜயதசமி உற்சவத் திருவிழா இடம்பெற்றது.