யாழ் மாவட்டத்தில் இன்று தபால்மூல வாக்களிப்பு

யாழ் மாவட்டத்தில் இன்று தபால்மூல வாக்களிப்பு

யாழ் மாவட்டத்தில் இன்று தபால்மூல வாக்களிப்பு சுகாதார திணைக்கள வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தேர்தலில் ஈடுபடும் காரணமாக இன்று அவர்களுக்குரிய வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பித்துள்ள தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

மொத்தமாக யாழ் மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு தகுதியானவர்கள் 21239 காணப்படுகின்றது அதேபோன்று யாழ் தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 24 829 பேர் தகுதி பெற்றுள்ளார்கள் இவர்கள் கட்டங்கட்டமாக இன்று தொடக்கம் 17ஆம் திகதி வரைக்கும் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் இன்று சுகாதார திணைக்களத்தினரும் வரும் 14, 15ம் திகதிளில் அரசாங்க திணைக்களத்தின் சகல திணைக்கள உத்தியோகத்தர்களும் அதேபோன்று 16,17ம் திகதிகளில் பாதுகாப்பு தரப்பினர் போலீஸ் மற்றும் மாவட்ட செயலக பிரதேச செயலகம் உள்ளிட்ட ஏனைய திணைக்கள உத்தியோகத்தர் வாக்களிப்பதற்கான திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஒழுங்கின் அடிப்படையில் தபால் மூல வாக்களிப்பு இடம் பெறவுள்ளது, தபால் மூல வாக்களிப்பு மேற்கொள்ள முடியாதவர்கள் வாக்களிப்பதற்கு இறுதிச் சந்தர்ப்பமாக 20, 21ம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த தினங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் அதே நேரத்தில் தபால் மூல வாக்களிப்பினை சுகாதார நடைமுறைகளைபின்பற்றி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தேர்தல் திணைக்களத்தினால் அத்தன மேற்கொள்ளப்பட்டுள்ளது இன்றைய தினம் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகி சுமுகமாக இடம்பெற்று வருகின்றது என்றார்.