தனியார் பேருந்து நடாத்துனர் மீது தாக்குதல்
தாக்குதல் காரணமாக கடுகண்ணாவை - கண்டி பேருந்து சேவை தனியார் பேருந்து நடாத்துனர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பேருந்து நடாத்துனர் சேவையில் இருக்கும் போது சிற்றூந்தில் பயணித்துள்ள அடையாளம் தெரியாத சில நபர்களினால் நேற்று மாலை இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான பேருந்து நடாத்துனர் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காவற்துறையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எந்த ஓர் நபரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.