விளையாட்டுத்துறை அமைச்சர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்திற்கு நேற்றைய (13) தினம் விஜயம் செய்தார்.
கணிசமானளவு நீரை சேமித்து விவசாய காணிகளுக்கு தேவையான நீரை தங்குதடையின்றி போதியளவு விநியோகிப்பதற்கான கித்துள், உறுகாம குளங்களை இணைத்து நீர் கொள்ளளவினை அதிகரிக்கும் திட்ட கட்டுமான நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.
இதன்போது சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்ததுடன், மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அபிவிருத்தித் திட்டங்களிலும் கவனம் செலுத்தினார்.
இந்நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.