
பொலிஸ் அதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடல்
வட மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
வட மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் தலைமையிலும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜெகத் அல்விஸ் தலைமையிலும் கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது வடமாகாணத்தில் வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலமைகள், பொலிஸ் துறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதோடு வட மாகாணத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப் பட்டமை குறிப்பிடத்தக்கது.