30 பவுன் தங்க நகை கொள்ளை
கஹவத்த எந்தான வீதி யாயின்ன பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் நுழைந்த இருவர், துப்பாக்கியினால் அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வர்த்தக நிலையத்திற்கு வந்திருந்த இருவரிடம் இருந்து 30 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று காலை 10.30 மணியளவில் குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கஹவத்த காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த இருவரும் உந்துருளியில் பயணித்து இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தங்க மாலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து காவற்துறை மற்றும் கஹவத்தை காவற்துறை அதிரடி படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.