இந்திய இராணுவப் படைகளின் பிரதானி இலங்கை வந்தடைந்தார்
இந்திய இராணுவப் படைகளின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே ஐந்து நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார்.
பாதுகாப்புப் படைகளின் பிரதானியும், இராணுவத்தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் இந்திய இராணுவப் படைகளின் பிரதானி ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கி இன்று (12) இலங்கை வந்துள்ளார்.
ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வுநிலை) கமல் குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொழம்பகே ஆகியோரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க உள்ளார்.
அத்துடன், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை மற்றும் வான் படைத் தளபதிகளையும் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது