வெள்ளைப்பூண்டு மோசடி

வெள்ளைப்பூண்டு மோசடி

நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தன, வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்று 4 அதிகாரிகள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் இன்று வெலிசறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.