இந்த மாதிரி கேள்விகள் உங்க காதலி கேட்டா…

இந்த மாதிரி கேள்விகள் உங்க காதலி கேட்டா…

10-ம் வகுப்பு, +2 பொது மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள், வேலை தேடி அலையும் போது எச்.ஆர் கேட்கும் கேள்விகளுக்கு கூட ஆண் சமுதாயம் அஞ்சி, நடுங்கியது இல்லை. ஆனால், காதலிக்க ஆரம்பித்த பிறகு தனது காதலி கேட்கும் எசக்குபிசக்கான மற்றும் சின்னாபின்னமாக்கிவிடும் கேள்விகளில் தான் சிக்கி தவித்து அல்லோலப்படுகிறான் ஓர் ஆண்.

அவர்கள் கேட்கும் கேள்வியானது மிகவும் எளிமையானது தான், ஆனால் அதற்கு எந்த பதிலை அளித்தால் மறுபடியும் கேள்வி கேட்கமாட்டார்கள், எந்த பதில் நம்மை வம்பில் மாட்டிவிடாது என்று யோசிப்பதற்குள் காதலியின் நீதிமன்றத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும். இனி, காதலில் அடிக்கடி கேட்டு நச்சரிக்கப்படும் சில கேள்விகள் பற்றிக் காணலாம்….

கலந்துரையாடல் ஆரம்பிக்கும் போது
காதலின் ஆரம்ப நாட்களில் அன்றாடம் இந்த கேள்விகள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். “நீ என்ன நிஜமாவே காதலிக்கிறியா??” பெரும்பாலும் அழகான பெண்களும், சுமாரான ஆண்களும் இந்த கேள்வியை கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

தோற்றம்
“நான் இன்னிக்கி எப்படி இருக்கேன், உடம்பு போட்ட மாதிரி தெரியுதா? இல்ல தான???” பெண்களை தவிர வேறு யார் இந்த கேள்விகளை பிரயோகம் செய்ய முடியும். ஆண்களை கடுப்படிக்கும் கேள்விகளின் முதல் வரிசை கேள்வி இதுதான்.

நாட்குறிப்பு
ஆண்கள் – பெண்கள், இதில் இருவரும் சலைத்தவர்களல்ல. “நீ என்ன பண்ண இன்னிக்கி..”, அலைபேசியில் பேச தொடங்கும் போது ஹலோ சொல்வதற்கு மாறாக இதை சொல்லி தான் ஆரம்பிக்கிறார்கள் பெரும்பாலான காதலர்கள்.

அக்கறையின்மை
மொபைலில் தினமும் அழைக்கும் நேரத்தைவிட சில வினாடிகள் தாமதமாகிவிட்டாலும் கூட, உனக்கு என்மேல அக்கறையே இல்ல-ல??? என்ற கேள்வி காதலியின் திருவாயில் இருந்து உதிர்ந்துவிடும்.

தாமதம்
ஒருவேளை காதலி கால் அல்லது குறுஞ்செய்தி அனுப்பி அதற்கு நீங்கள் உரிய நேரத்தில் பதில் அளிக்காமல் இருந்துவிட்டால் (அ) தாமதம் செய்துவிட்டால் அவ்வளவு தான். நீங்கள் இப்போது ஒரு தேசத் துரோக குற்றம் செய்தவரை போல வரையறுக்கப் படுவீர்கள். கேள்விகள் AK47 துப்பாக்கி குண்டுகள் போல உங்கள் மீது பொழிய ஆரம்பித்துவிடும்.

நண்பர்கள் உடன் அரட்டை
பெரும்பாலும் காதலிகள் கேள்வி மீது கேள்வி கேட்பதே நண்பர்களுடன் எங்காவது வெளியே சென்றால் தான். அது என்ன மாயமோ, மர்மமோ தெரியவில்லை, காதலியின் தோழிகளை காதலனுக்கு பிடிக்கிறது. காதலனின் நண்பர்களை காதலிக்கு பிடிப்பதே இல்லை. (ஓ வாட்ட பிட்டி!)

வர வர நீ சரியில்ல
என்ன செய்தலும் பெண்கள் இந்த கேள்வியை கேட்காமல் இருப்பதே இல்லை. சில சமயங்களில் நக்கலாக, கொஞ்சும் விதமாக கூட காதலி, காதலனிடம் இந்த கேள்வியை கேட்பதுண்டு.

மாற்றம்
காதலன் கொஞ்சம் வேலை பளுவுடன் ஓரிரு நாட்கள் இருந்துவிட்டால் அவன் மாறிவிட்டான் என்பது பெரும்பாலான காதலியின் கணிப்பு. இதை எல்லாம் கேட்டு, வாங்கிக் கொட்டிக் கொண்ட பிறகும் கூட, ஆசையாய் முத்தம் கேட்பது தான் ஆண்களின் கெத்து. (நமக்கு நம்ம வேலை தான முக்கியம்.)