இரத்தினபுரியில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்றாளர்கள்!
இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கபிலா கண்ணங்கரா உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்கள் மூவரும் கந்தக்காடு மறுவாழ்வு மையத்தில் பணியாற்றி வருகின்றவர்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவர்களுடன் நெருங்கி பழகிய சுமார் 60 பேர் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரத்தினபுரி ,தேவாலயாகவா, குருவிட்ட மற்றும் எஹெலியகொட தோரனகொட பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளனர்.
இதன்போது தொற்றுக்குள்ளான ஒருவர் இரத்தினபுரியில் உள்ள சீவாலி மற்றும் அலோசியஸ் பாடசாலைகளுக்கு சென்று வந்துள்ளதாகவும், இதன் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.