முஷரப் ராணுவ புரட்சி மூலம் பாகிஸ்தான் அதிபரானார் (அக்.12- 1999)

முஷரப் ராணுவ புரட்சி மூலம் பாகிஸ்தான் அதிபரானார் (அக்.12- 1999)

பர்வேஸ் முஷரப் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999-ம் ஆண்டு பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் களைத்து ராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் ராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார். 2007 மார்ச் மாதம் நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்கு குறையத் தொடங்கியது. 2008-ல் ஆகஸ்ட் 18-ம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

 

பர்வேஸ் முஷரப் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999-ம் ஆண்டு பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் களைத்து ராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் ராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார்.

2007 மார்ச் மாதம் நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்கு குறையத் தொடங்கியது. 2008-ல் ஆகஸ்ட் 18-ம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

 


இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1899 - தென்னாபிரிக்காவின் போவர் குடியரசு இங்கிலாந்து மீது போரை அறிவித்தது. * 1915 - முதலாம் உலகப் போர்: கூட்டுப்படைகளை பெல்ஜியத்தில் இருந்து தப்ப உதவியமைக்காக பிரித்தானியத் தாதி எடித் கவெல் என்பவர் ஜேர்மனியர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். * 1918 - மினெசோட்டாவில் கிளம்பிய காட்டுத்தீயினால் 453 பேர் கொல்லப்பட்டனர். * 1941 - உக்ரேனின் தினிபுரோபெத்ரோவ்ஸ்க் நகரில் இந்நாளிலும் இதற்கு அடுத்த நாளிலும் நாசி ஜெர்மனியினர் 11,000 யூதர்களைக் கொன்றனர். * 1964 - சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது கப்பலாகும்.

* 1968 - ஈக்குவட்டோரியல் கினி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. * 1976 - மறைந்த மா சே துங்கின் இடத்திற்கு ஹுவா குவோபெங்க் என்பவரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நியமிப்பதாக மக்கள் சீனக் குடியரசு அறிவித்தது. * 1984 - ஐ.ஆர்.ஏ குண்டுவெடிப்பில் இருந்து மார்கரெட் தாட்சர் காயமெதுவும் அடையாமல் உயிர் தப்பினார். * 1986 - மன்னார் அடம்பனில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக சிங்கள ராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார்