சுமார் 70,000 பேர் இதுவரை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை
தற்போது கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட மட்டத்தில் தரவுகள் சேகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத இந்த வயதினர்கள் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கிய அறிக்கையை இம்மாதம் 11 ஆம் திகதி அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட சமார் 70,000 பேர் இதுவரையிலும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பது பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, இதுவரையிலும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் இருப்பின், அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)