கந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்- இராணுவத் தளபதி

கந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்- இராணுவத் தளபதி

கந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கந்தகாடுவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுள்ள கைதிகளைப் பார்வையிடவென, 116 பேர் இதுவரை வருகை தந்திருந்தனர்.

குறித்த அனைவரும் வெவ்வேறு பகுதிகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த அனைவரும் பயணித்துள்ள இடங்கள் அனைத்தும், இந்த வாரத்திற்குள்ளேயே அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

ஆகவே கந்தகாடு நிலைமையை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.