ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்

ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்

ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

அலரி மாளிகையில் வைத்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ., கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் வருகை தந்த ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இவ்வாறு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.