கொரோனா தொற்றைத் தடுக்கும் பணியில் ஈடுபடுவோரின் நலனுக்காக 108 நாட்கள் விரதமிருந்த யாழ். முதியவர்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நலம் வேண்டி முதியவரொருவர் 108 நாட்கள் விரதம் அனுஷ்டித்துள்ளார்.
யாழ்ப்பாணம்- கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி நடராசா என்ற 81 வயது முதியவரே இத்தகைய நெகிழ்ச்சியான செயலைப் புரிந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் நலனுக்காக, கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் இந்த ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர், நேர்த்தி வைத்து,108 நாட்கள் விரதம் இருந்து தனது தலைமுடி மற்றும் தாடியை இறக்கியுள்ளார்.
குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.