கவிப்பேரரசர் வைரமுத்துவின் பிறந்த தினம் இன்று!
கவிப்பேரரசர் வைரமுத்து இன்று (திங்கட்கிழமை) தனது 66 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
எத்தனை கவிஞர்கள் வந்தாலும் அவருக்கு நிகர் அவரே என்று கூறுமளவிற்கு இன்றளவும் கவிதைகளில் மனிதனின் அடிப்படை வாழ்க்கை மட்டுமன்றி கண்ணால்கூட காணமுடியாத விந்தை உலகை மனக்கண்முன் நிறுத்தும் வல்லமை நாயகன் வைரமுத்து என்றால் அது மிகையாகாது.
“பொன்மாலைப் பொழுது” என்ற திரைப்பட பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் 7500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
இன்றும் ஒவ்வொரு வானொலியிலும், தொலைகாட்சியிலும் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது இவரது பாடல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து இவரின் கூட்டணி பட்டுத்தொட்டி எங்கும் எதிரொலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.