
காணாமல் போயிருந்தவர் சடலமாக மீட்பு!
தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்ட முதியவரின் சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை இத்தியடியைச் சேர்ந்த கந்தையா தேவராசா என்கிற 76 வயது முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் நேற்றைய தினத்திலிருந்து காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் இன்று காலை மீன் பிடிக்க சென்றவர்கள் சடலம் ஒன்று நீரேரியில் மிதப்பதை அவதானித்து அது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.