தடுப்பூசி ஏற்றப்படுவது கட்டாயமாக்கப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தும் நிலை ஏற்படலாம்

தடுப்பூசி ஏற்றப்படுவது கட்டாயமாக்கப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தும் நிலை ஏற்படலாம்

கொரோனா வைரஸ் தொற்றுபரவலுக்கு எதிரான தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதை சிலர் தவிர்ப்பதினால் அத்தகைய நபர்களினால் மற்றவருக்கு தொற்று ஏற்படும் நிலை ஏற்படுமாயின் தடுப்பூசி ஏற்றுவதைக் கட்டாயப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்று சிகிச்சைப் பிரிவை நேற்றைய தினம் (26) திறந்துவைத்த பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்வதை சிலர் தவிர்த்துவருவதினால் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது கட்டாமாக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கையில், தடுப்பூசி ஏற்றுவதே மிகவும் சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக்கு அமைவாக அனைத்து மக்களும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன் அவசியத்தை நாம் அறிவுறுத்திவருகின்றோம்.

ஆனால் சிலர் அதாவது எமது அறிக்கைக்கு அமைவாக தடுபபூசியை ஏற்றிக்கொள்வதை தவிர்த்துவருவதாக அவதானிக்க முடிகிறது. இவ்வறானவர்கள் இது தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாடுடன் இருக்கக்கூடும். இருப்பினும் சுகாதார வைத்தியதுறை ரீதியில் மிக அலுத்தமாக தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். தேவையற்ற பிரசாரங்களை கருத்திற்கொள்ளாது தமது உயிர் பாதுகாப்பு கருதி தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றோம்.

எதிர்காலத்தில் இது அத்தியாவசியம என்று கருதப்பட்டால் அதாவது தமது உயிர் பாதுகாப்பு தொடர்பில் எந்தளவுக்கு ஒருவருக்கு உரிமை இருக்கின்றதோ அதேபோன்று மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அத்தருணத்தில் சட்ட ரீதியிலான நடவக்கை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இருப்பினும் இதுதொடர்பில் வைத்திய துறையினரிடம் ஆழமாக ஆய்வுகளை மேற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

சமகால அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கண்டி தேசிய வைத்தியசாலையில் காணப்படும் அனைத்து கட்டிட நிர்மாணப் பணிகளும் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்;.

இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர், ரத்நாயக, பிரதிப் பணிப்பாளர் இர்சா பெர்னாண்டோ, சுகாதார துறை உயர் அதிகாரிகள், பாக்கிஸ்தான் நாட்டின் வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்