அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் – மஹிந்த!

அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் – மஹிந்த!

பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதுக்க நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த நிலத்திற்குள் நுழையும் போதே என்னால் மிகவும் மகிழ்ச்சியை உணர முடிகின்றது.

எங்கள் அரசாங்கம் காணப்பட்ட காலப்பகுதியில் நான் பாடசாலை ஒன்றை திறக்க வந்தவுடன் இந்த நிலத்தை பார்க்க வந்தேன். இங்கு மிகப்பெரிய சதுப்பு நிலமே காணப்பட்டது.

நான் அந்த நேரத்திலேயே அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பேற்படுத்தி இந்த நிலத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினேன்.

அவர் அந்த வேலையை செய்தார். இதனால் இன்று நங்கள் இந்த முறையில் மிகவும் சுத்தமாக, தெளிவான அபிவிருத்தியடைந்த இடத்தில் கூட்டத்தை நடத்துவது குறித்து எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை உணர முடிந்தது.

அன்று நாங்கள் சிறிய கலந்துரையாடலில் ஆரம்பித்த பொதுஜன பெரமுனவின் வருகை இன்று மிகப்பெரிய சக்தியாகியுள்ளது. பிரதேச சபை தேர்தலில் நான்காயிரம் பிரதிநிதிகளை நியமிக்க முடிந்தது.

அன்று 71 சதவீத வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றோம். வடக்கு – கிழக்கை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் நாங்கள் மிகவும் தெளிவான விசேட வெற்றியை பெற்றோம் என்று கூறினால் சரியாக இருக்கும்.

கடந்த அரசாங்கம் இரண்டு வருடங்களாக மாகாண சபை தேர்தலை பிற்போட்டது. மாகாண சபை தேர்தலை பிற்போட்டுவிட்டு முடிந்த விடயங்களை செய்தார்கள்.

நாட்டில் நல்ல நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்த நேரிட்டது. நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்றோம். இந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொண்டு பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

கடந்த 5 வருட ஆட்சியில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் முடிந்த விடயங்களை செய்தோம். எனினும் கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இருந்த மோதல் காரணமாக மக்களுக்கு எந்த ஒரு விடயமும் கிடைக்கவில்லை.

தற்போது என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியில் பிளவுப்பட்டவர்கள் அரசாங்கம் ஒன்றை அமைக்க வாக்கு கேட்கவில்லை. வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வாக்கு கேட்காத முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அவர்கள் சிறிகொத்தவை கைப்பற்றவே வாக்கு கேட்கின்றார்கள். அது நீதிமன்றத்திற்கு சென்றாவது தீர்த்துக் கொள்ள முடியும். நாட்டை அமைக்க எங்களுடன் இணையுமாறு நான் எங்கள் இளைஞர் யுவதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.