சரியான முடிவு எடுக்காவிட்டால் ஸ்ரீலங்காவிற்கு ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போதைய சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானங்களை எடுக்காது போனால், நாட்டை மீண்டும் மூட நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் சேனால் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் மீண்டும் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
கொரோனா வைரஸ் தொற்றிய நபர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு, அந்த பிரதேசங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்
தற்போதைய சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானங்களை எடுக்காது போனால், நாட்டை மீண்டும் மூட நேரிடும்.
இதனால், நாடு அப்படியான இடத்திற்கு மீண்டும் செல்வதை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று கையளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.