பிளாஸ்ரிக் பாவனைகள் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துகின்றது – க. மகேசன்
பிளாஸ்ரிக் பாவனைகள் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதுடன், அபிவிருத்தியிலும் பின்னடைவை ஏற்படுத்துகின்றது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் பணி இராணுவத்தினரால் யாழ் குடாநாடெங்கும் பொலிதின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவகற்றல் செயற்பாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இடம் பெற்றதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது. அங்கு ஊடககங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “பிளாஸ்ரிக் பொருட்களை சுத்தப்படுத்துவதனை நோக்கமாக கொண்டு, யாழ்ப்பாண கட்டளைத் தலைமையத்தினால், நகரத்தை பிளாஸ்டிக் பாவனையில் இருந்து மீட்டெடுத்தல் மற்றும் பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில், இந்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போது, உலகளாவிய ரீதியில் இந்த பொலீத்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவணைகள் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.
எம்மைப் பொறுத்தவரையில் பாரிய அச்சுறுத்தலாக இந்த பிளாஸ்ரிக் கழிவுகள் காணப்படுகின்றன. பொருளாதாரத்தை முடக்குகின்ற அளவிற்கு அல்லுத பல்வேறு அபிவிருத்திப் பின்னடைவிற்கு இந்த பிளாஸ்ரிக் கழிவுகள் பிரதான காரணமாக இருக்கின்றன.
இலங்கை மட்டுமல்ல ஆசிய நாடுகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் பிளாஸ்ரிக் பொருட்கள் கடலில் கலப்பதினால், உணவில் ஏற்படுகின்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகப் பாரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
பசுமைப் பொருளாதாரம் அல்லது நீலப் பொருளாதாரம் என்று சொல்லப்படுகின்ற, உடல் உணவு உட்பட ஏனைய சுகாதார அச்சுறுத்தல்களுக்கு இந்த பிளாஸ்ரிக் பாவணை காணப்படுகின்றது.
ஆகவே, எமது அரசாங்கமும் ஒரு கொள்கையை வகுத்து, பிளாஸ்ரிக் பொருட்களை உற்பத்தி செய்வதனை தடை செய்துள்ளது அல்லது மீள்சுழற்சி செய்து அவற்றைப் பயன்படுத்துவதற்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு, மாவட்டம், கிராமம், குடும்ப ரீதியில் ஏற்படுத்தி வருகின்ற தாக்கம் மிகப் பெரியது. ஏனெனில், பிளாஸ்ரிக் பொருட்கள் உக்குவதற்கு 1000 வருடங்கள் எடுக்கின்றதாக, வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆகவே, இந்தப் பிளாஸ்ரிக் பொருட்களை, பயன்படுத்துவது மற்றும் மீள்சுழற்சி, தவிர்ப்பது மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையகம் எடுத்துள்ளது. இந்த விழிப்புணர்வு எமது மக்களிடையே சென்றடைய வேண்டும். எமது சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்ரிக் பொருட்களை கழிவகற்றுவுதற்கு கிராமமாக மேற்கொள்வதும், அதேபோன்று, பிளாஸ்ரிக் பொருட்களின் பாவணையைத் தடுப்பதற்கும், மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் ஊடாக, எமது சமூகத்தை நோய்களிலும், தொற்றுக்களில் இருந்தும் பாதுகாப்பதற்கும், இந்த பிளாஸ்ரிக் பொருட்களை தவிர்ப்பது இன்றியமையாதது, எனவே, பொது மக்கள் பிளாஸ்ரிக் பொருட்களை பாவிப்பதில் விழிப்புணர்வு பெற வேண்டுமென்பதுடன், எமது சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கும் ஒத்துழைப்புத் தர வேண்டுமென்றும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.