விவசாயிகளுக்கு கோட்டாபய வழங்கிய தரமான ஆலோசனை!

விவசாயிகளுக்கு கோட்டாபய வழங்கிய தரமான ஆலோசனை!

உள்ளூர் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமையளித்து அதிக இலாபம் ஈட்டுவதற்கு முயற்சிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிளகு மீள் ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே விதைகள், தூள் அல்லது வேறு ஆக்கப்பெற்ற பொருட்களாக பொதியிடப்பட்ட மிளகை ஏற்றுமதி செய்யுமாறு ஜனாதிபதி விவசாயிகளுக்கு தெரிவித்தார். பெறுமதி சேர்க்கும் முறைமையை பின்பற்றி அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உடுதும்பர ஹசலக்க நவரத்ன விளையாட்டரங்கிலும் ஹசலக்க சந்தை வளாகத்திலும் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இடைத்தரகர்களிடம் அகப்பட்டு விடாது நெல் அறுவடைகளை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மினிப்பே பிரதேசவாசிகள் முகங்கொடுத்துள்ள குடிநீர் பிரச்சினை குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது கவனம் செலுத்தவகவும் அவர் கிரமாவாசிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்பதற்கான வசதிகளைக்கொண்ட பாடசாலை ஒன்று ஹசலக்க பிரதேசத்தில் இல்லாமையினால் பிள்ளைகள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்தும் மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.