செயன்முறை பரீட்சை பெறுபேறு இன்றி 236,053 பேர் உயர் தரத்துக்கு தகுதி
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகின.
கொவிட்-19 பரவல் காரணமாக, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின், அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெற்றிருக்கவில்லை.
அதற்மைய, குறித்த செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி 236,053 பேர் உயர் தரத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர், செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அதன் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.