வெலிக்கடை சிறைக்கைதிகளின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

வெலிக்கடை சிறைக்கைதிகளின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீதேறி 10 கைதிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என கோரி 10 சிறைக்கைதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலைகள் செயற்பாட்டு ஆணையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இன்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

எனினும், அவர்கள் தெளிவுப்படுத்தல்களை நிராகரித்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.