நேற்றைய தினம் 2,475 பேருக்கு கொவிட் தொற்று!

நேற்றைய தினம் 2,475 பேருக்கு கொவிட் தொற்று!

நாட்டில் நேற்றைய தினம்  2,475 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 2,473 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகி உள்ளதுடன், 2 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

இதுவரை தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 490,957 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,354 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 415,649 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 63,741 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.