காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதி

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதி

தமிழக அகதி முகாமில் இருந்து தப்பி வந்த நால்வரில் ஒருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்களில் அகதிகள் இருவரும், படகை ஓட்டி வந்தவர்கள் இருவருமாக நால்வர் இருந்துள்ளனர்.

இவர்களை தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்தே கைதான நால்வரில் ஒருவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் தங்கியிருந்த இருவர் சட்டவிரோதமாக படகில் வரும் போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.