வவுனியாவில் மாட்டு சாணத்தின் விசவாயு தாக்கி இளைஞன் மரணம்

வவுனியாவில் மாட்டு சாணத்தின் விசவாயு தாக்கி இளைஞன் மரணம்

வவுனியா - சேமமடு பகுதியில் மாட்டு சாணத்தின் விசவாயு தாக்கி இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் உள்ள காணியொன்றில் பல மாதங்களாக குவிக்கப்பட்டிருந்த மாட்டு சாணத்தினை பாரவூர்த்தி ஒன்றில் சிலர் ஏற்றியுள்ளனர்.

இதன்போது சாணத்தை ஏற்றிய இளைஞர் ஒருவர் இளைப்பாறுவதற்காக குறித்த சாணிக்கும்பத்தின் மேல் இருந்துள்ளார்.

இதன்போது மாட்டு கழிவில் இருந்து தாக்கிய விசவாயு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் ஓமந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது எஸ்.ரஞ்சிதகுமார் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.