நேற்றைய தினம் 2,842 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!
நாட்டில் நேற்றைய தினம் 2,842 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் 2,832 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியதுடன், 10 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
இதற்கமைய இதுவரை நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 480,478 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும்1,512 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 409,628 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொற்றுறுதியான 59,855 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.