இலங்கை அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இலங்கை அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்த தென் ஆபிரிக்க அணி 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் எய்டன் மார்க்ரம் 01 பவுண்டரி, 02 சிக்ஸர்கள் அடங்களாக 48 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 23 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய இலங்கை அணி 164 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது.