
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 42,766 பேருக்கு தொற்று
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 142, மகாராஷ்டிராவில் 64 பேர் உள்பட நேற்று 308 பேர் இறந்துள்ளனர். இது கடந்த 159 நாட்களில் இல்லாத அளவில் ஒரு நாள் பலி எண்ணிக்கையில் குறைவு ஆகும்.
கொரோனா வைரஸ்
புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 29 லட்சத்து 88 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் புதிதாக 29,682 பேருக்கு தொற்று உறுதியானது. மகாராஷ்டிராவில் 4,130, தமிழ்நாட்டில் 1,575, ஆந்திராவில் 1,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 142, மகாராஷ்டிராவில் 64 பேர் உள்பட நேற்று 308 பேர் இறந்துள்ளனர். இது கடந்த 159 நாட்களில் இல்லாத அளவில் ஒரு நாள் பலி எண்ணிக்கையில் குறைவு ஆகும்.
மொத்த பலி எண்ணிக்கை 4,40,533 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 1,37,707 பேர் அடங்குவர்.
நோய் பாதிப்பில் இருந்து நேற்று 38,091 பேர் மீண்டனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 92 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 4,10,048 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றுமுன்தினத்தை விட 4,367 அதிகம் ஆகும்.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 71,61,760 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 68 கோடியே 46 லட்சம் டோசாக உயர்ந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி நேற்று 17,47,476 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மொத்த பரிசோதனை எண்ணிக்கை 52.99 கோடியாக உயர்ந்துள்ளது.