
கிளிநொச்சியில் நாளை இரண்டாவது கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை முதல் இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் இதனை தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், புனித திரேசா பெண்கள் கல்லூரி, உருத்திரபுரம் ஆரம்ப வைத்தியசாலை, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகாவித்தியாலயம், பாரதிபுரம் மகாவித்தியாலயம் உள்ளிட்ட தடுப்பூசி நிலையங்களில் இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன் பிரமந்தனாறு கிராம சேவையாளர் அலுவலகம், தர்மபுரம் மத்திய கல்லூரி, பரந்தன் கிராம சேவையாளர் அலுவலகம், முழங்காவில் வைத்தியசாலை, பூநகரி வைத்தியசாலை, வேவில் வைத்தியசாலை, பளை மத்திய கல்லூரி ஆகிய தடுப்பூசி நிலையங்களில் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.