அமிதாப்பச்சனுக்காக உருகும் பிரதமர் மஹிந்த!
பிரபல இந்திய திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது புதல்வர் ஆகியோர் சிறந்த உடல் நலத்துடன் விரைவாக குணமடைய அவர்களுக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர்கள் இந்தியாவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
77 வயதான நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் மும்பாயில் உள்ள நானாவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அமிதாப்பச்சன் மற்றும் அவரது புதல்வர் ஆகியோருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதியானது.
இதேவேளை கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Praying for the good health and speedy recovery of both you @SrBachchan and your son @juniorbachchan. Our prayers are with you.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) July 12, 2020