நேற்று 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
நாட்டில் நேற்று 511,142 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதற்கமைய, 41,166 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 442,237 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
4,018 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும், 485 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அதேநேரம், 21,405 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசியும், 169 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
17 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 1,645 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
இதன்படி, கடந்த 2 நாட்களில் 10 இலட்சத்து 82 ஆயிரத்து 731 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.