வயலுக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வயலுக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டன.

அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த வேளையில் நேற்று (31) பகல் குறித்து கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளரால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இராணுவத்தினரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

குறித்த கைக்குண்டுகளை பாதுகாப்பாக அடையாளப்படுத்திய பொலிசார், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு விசேட அதிரடிப்படையினர் மூலம் அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றி செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.