இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய முற்பட்ட 4 பேர் கைது
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வருகை தந்த 4 பேர் யாழ்ப்பாண கடற்பரப்பில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவருக்கு மூச்சு திணறல் காணப்பட்டதை அடுத்து அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளரல் இசுறுசூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
அவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு அந்த அறிக்கை இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஏனைய மூவரும் இராணுவத்தினரின் ஊடாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் படகினை செலுத்தியவர்கள் எனவும் ஏனைய இருவர் பயணிகள் எனவும் கடற்படை பேச்சாளர் இசுறுசூரிய பண்டார தெரிவித்துள்ளார்.