கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு அருகிலுள்ளவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறதியாவதை கட்டுபடுத்த முடியுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் வெவ்வேறு பகுதிகளிலும் கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் இனங்காணப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நேற்றைய தினம் 57 பேருக்கு கொரோனா தொற்றுறதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலுள்ள 13 பேருக்கும் அவர்களுடன் சம்பந்தப்பட்ட 30 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் புனர்வாழ்வு மையத்தில் மேலும் 5 பேருக்கு முன்னதாக கொவிட்-19 தொற்றுறுதியானது.

வெலிகந்த பகுதியை சேர்ந்த இருவருக்கும், ராஜாங்கணையை சேர்ந்த ஒருவருக்கும் ஹபராதுவ மற்றும் லங்காபுரயை சேர்ந்த 3 பேருக்கும் இவ்வாறு கொவிட்-19 தொற்றறுதியாகியுள்ளது.

அதேநேரம் நேற்று மாலை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய நான்கு பேருக்கும், குவைட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானது.

நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் ஆயிரத்து 980 பேர் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் 520 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொவிட்-19 தொற்று காரணமாக மலைத்தீவில் சிக்கியிருந்த மேலும் 185 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக இன்று முற்பகல் அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.