போலி நாணயத்தாள்களை அச்சிட்ட காதல் ஜோடி கைது (காணொளி)
37,020.00 ரூபாய் மதிப்புள்ள போலி நாணயத்தாள்களை அச்சிட்ட காதல் ஜோடி ஒன்றை குருவிட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குருவிட்ட காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து குருவிட்ட-தொடம்பே-மண்டதெணிய பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து 5000 ரூபாய் நாணயத்தாள்கள் இருபதும், 500 ரூபாய் நாணயத்தாள்கள் 34 மற்றும் 10 ரூபாய் நாணயத்தாள்கள் இரண்டையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண் அனுராதபுரம், லேகொலவெவ, மஹகல்கட பிரதேசத்தில் வசித்து வரும் 34 வயதுடையவர் என்பதோடு அவரின் காதலியின் வீட்டிலேயே குறித்த அச்சிடும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.
குறித்த போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கும் மாற்றுவதற்கும் உதவியதாக தெரிவிக்கப்படும் 44 வயதுடைய சமாதான நீதவான் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குருவிட்ட காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.