
இடுகம நிதியத்திற்கு பல மில்லியன் ரூபாவை வழங்கிய யாழ். தமிழர்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் ‘இடுகம’ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 10 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீ. தியாகேந்திரனினால், கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு, நன்கொடையாக வழங்கப்பட்ட ரூபா 10 மில்லியன் நிதிக்கான காசோலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவல் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இதற்கான காசோலையை வழங்கினார்.
இது குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.