நேற்றைய கொவிட் மரண பட்டியலில் இலங்கைக்கு 13 ஆவது இடம்: இறப்பு சதவீதம் 2.01 ஆக அதிகாிப்பு

நேற்றைய கொவிட் மரண பட்டியலில் இலங்கைக்கு 13 ஆவது இடம்: இறப்பு சதவீதம் 2.01 ஆக அதிகாிப்பு

நாட்டில் இரண்டாவது நாளாகவும், நாளாந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை, 200ஐ கடந்துள்ளது.

அதற்கமைய, நேற்று மொத்தமாக 214 கொவிட்-19 மரணங்கள பதிவாகியுள்ளன.

இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிக கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

இதில் 30 வயதுக்கு குறைவான 5 பேரும்,  30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 58 பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட 151 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்றுமுன்தினம் உறுதிப்படுத்தப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 8, 371 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் கொவிட் மரணங்களின் சதவீதமானது, 2.01 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச தரவுகளின் அடிப்படையில், நேற்றைய நாளில் கொவிட் மரணங்கள் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் உள்ளது.

நேற்றைய நாளில், சர்வதேச ரீதியில் அமெரிக்காவில் அதிக கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. 1,275 இற்கும் அதிகமான மரணங்கள் அங்கு பதிவானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக ரீதியில் நேற்றைய நாளில், 9, 800 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, சர்வதேச கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 44 இலட்சத்து 97 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No description available.
No description available.

May be an image of text that says 'රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව தகவல் திணைக்களம் Department Government Information 27.08.2021 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 872/2021 வெளியிடப்பட்ட நேரம் 19:45 27.08.2021ஆம் திகதி அறிக்கையிட ப்பட்ட கொவிட் மரணங்களின் இன்று 27.08.2021ம் திகதி அறிக்கையிடப்பட்டது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் 19 தொற்று மரண ங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை 30 வயதுக்கு கீழ் ஆண்கள் வயது 03 பெண்கள் இடை யில் 02 மொத்தம் 34 60 வயது மற்றும் அதற்கு மேல் மொத்தம் 05 24 83 58 68 120 94 151 214 Dimn' 다d Im சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் කිරුලපන අලංකාව. (+9411)2515759 www.news.lk'