நாட்டில் வேலை தேடுபவர்களுக்கான அரிய வாய்ப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டில் வேலை தேடுபவர்களுக்கான அரிய வாய்ப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நற்செய்தியாக, பிரபல தமிழ்த் தொழிலதிபரும், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான மற்றும் றீச்சா நிறுவனத் தலைவர் பாஸ்கரன் கந்தையா (Baskaran Kandiah) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சுமார் 200 பேர் வரை றீச்சா  நிறுவனத்தில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எந்தப் பகுதியில் உள்ளவர்களாக இருந்தாலும், தங்களது கல்வி மற்றும் தொழில் சார்ந்த தகுதிகளுடன் கூடிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

🛑 விண்ணப்பிக்கும் முறை

  1. வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மேலதிக தகவல்களை reecha.lk என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.
  2. அதன் மூலம், விண்ணப்பதாரர்கள் தங்களது தகவல்களை நேர்த்தியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்தால், நிறுவனத்திலிருந்து நேரடியாக தொடர்பு கொண்டு கலந்துரையாடல் (interview) நடைபெறும்.

🛑 வழங்கப்படும் வேலைவாய்ப்புகள்

  1. காவல் பணியாளர் (Security Officer)
  2. தோட்ட பராமரிப்பு பணியாளர்
  3. கால்நடை வளர்ப்பு பணியாளர்
  4. சமையலர் மற்றும் Housekeeping
  5. முகாமைத்துவ (Management) தலைமைப் பணிகள்

🛑 தங்கும் வசதியுடன் 

  1. தூர பிரதேசங்களில் இருந்து வேலைக்கு சேரும் விண்ணப்பதாரர்களுக்கு, இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. இது பொருளாதார ரீதியாகவும் பயனுள்ளதாக அமையும்.  

 

இந்த வேலைவாய்ப்பு முயற்சி, இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சமூகக் கடமையென்ற நெறிமுறையின் கீழ் செயல்படுவதாக பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.

வேலை தேடும் இலங்கையர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.

தங்களது வாழ்க்கையை மாற்றும் ஒரு புதிய திசைதொடக்கம் ஆக இது அமைவதாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.