நாட்டில் மேலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி
நாட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இராஜாங்கனை பகுதியை சேர்ந்த நால்வருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவ்வமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2515 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில், 1980 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 524 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.