
ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு என்டிஜன் பரிசோதனை!
ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், பல்வேறு காரணங்களுக்காக பிரதான வீதியில் பயணித்த 100 பேருக்கு அளுத்கம தர்கா நகரில் வைத்து உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அளுத்கம பொலிஸ் மற்றும் பேருவளை பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது எட்டு பேருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, சற்றுமுன்னர் வௌியான கொவிட் தொற்றாளர்கள் குறித்த முதற்கட்ட அறிக்கையின் படி நாட்டில் 3,812 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 416,182 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.