பொலிஸாரின் முற்றுகைக்குள் சிக்கிய சட்டவிரோத கும்பல்!

பொலிஸாரின் முற்றுகைக்குள் சிக்கிய சட்டவிரோத கும்பல்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்துள்ளார்.

இதன்படி புலிபாய்ந்தகல் மற்றும் மூக்கரையன்கல் ஆகிய இரண்டு பிரதேசங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏழு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுனவின் வழிகாட்டலில், இரண்டு குழுக்கள் நடாத்திய தேடுதலின் போதே ஏழு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஏழு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் ஆகிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு விஷேட குழு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.