
142 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் புதுமாத்தளன் பகுதியில் நான்கு உரப்பைகளில் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 142 கிலோகிராம் கேரள கஞ்சா நேற்று மாலை (26) மீட்க்கப்பட்டுள்ளது
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பாரிய பொதிகள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ புலனாய்வாளர்களின் தகவல் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் குறித்த பொதிகளை மீட்டுள்ளனர் இதில் நான்கு உரப்பைகளில் இருந்து 72 பொதிகள் காணப்படுவதோடு 142 கிலோகிராம் நிறை என தெரியவருகிறது
அளவீட்டு பணிகளை தொடர்ந்து மேலதிக நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினரால் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது