யாழ் நகரை சுத்தப்படுத்தும் ஸ்ரீலங்கா இராணுவம்
யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற சமூக செயற்பாட்டு சேவைகளின் ஒன்றாக, பொலித்தீன் பாவனையினை முற்றாக அகற்றுவோம் என்ற கருப்பொருளில் நகரை சுத்தம் ஆக்கும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பாதுகாப்பு படைத்தலைமையக கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் ரூவான் வணிகசூரியவின் வழிகாட்டலின் கீழ் 512 ஆவது, 55 ஆவது, 513 ஆவது ஆகிய படைப்பிரிவின் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பொலித்தீன் பாவனையினை முற்றாக அகற்றுவோம் என்னும் சமூக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது காலை யாழ் பண்ணை கடற்பரப்பில் இருந்து ஆரம்பமாகியது.
முதற்கட்டமாக யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வட்டார ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த செயற்பாட்டில் 100 மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.