மேல்மாகாணத்தில் விசேட சோதனை- 385 பேர் கைது

மேல்மாகாணத்தில் விசேட சோதனை- 385 பேர் கைது

மேல்மாகாணத்தில் நேற்று காலை 6 மணி தொடக்கம் 5 மணிவரை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் 385 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 136 பேர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதோடு, 85 பேர் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, மேலும் 13 பேர் ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிலும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த சுற்றிவளைப்பில் மொத்தமாக ஹெரோயின் போதைப்பொருள் 93.244 மில்லிகிராம், கஞ்சா 0.567 கிராம் மற்றும் 12 கிராம் ஐஸ் ரக போதைப்பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.